கடல் குறித்து சுவாரஸ்ய்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம்....
கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் தண்ணீர் மட்டுமே நிரம்பி அலையெழுப்பிக் கொண்டிருக்கும் கடல் மனிதனுக்கு எப்போதும் சுவாரஸ்யமான ஒன்று தான். ரசிக்கும் அதே வேலையில் கடல் நம்மை பயமுறுத்தவும் செய்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. பூமிப்பந்தின் 70 சதவீத இடத்தினை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது இந்த கடல். அதன் பரந்துப்பட்ட இடத்திற்கு ஏற்பவே தன்னுள்ளே பல்வேறு சுவாரஸ்யங்களை புதைத்து வைத்திருக்கிறது. கடல் குறித்து இதுவரை உங்களுக்குத் தெரியாத சில சுவாரஸ்ய்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம். கடல் டிராகன் : இந்த பூமியில் வாழ்கிற 94 சதவீத உயிரினங்கள் கடல் வாழ் உயிரினங்கள் தான் அவற்றின் மூன்றில் இரண்டு பகுதி உயிரினங்களை நாம் இன்னும் அடையாளம் காணவே இல்லை. தொடர்ந்து கடல் ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொன்றாக கண்டுபிடித்து அடையாளப்படுத்துக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் தெற்கு பகுதிக்கடலில் சிவப்பு நிற கடல் வாழ் டிராகனை கண்டுபிடித்திருந்தார்கள். சத்தம் : கடலில் வாழுகின்ற உயிரினனங்கள் மட்டுமல்ல கடலில் எழும் ஓசை கூட ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் அதிசயமாய்த்தான் இருக்கிறது. கடலுக்கு அடியில...