கடல் குறித்து சுவாரஸ்ய்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம்....

 கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் தண்ணீர் மட்டுமே நிரம்பி அலையெழுப்பிக் கொண்டிருக்கும் கடல் மனிதனுக்கு எப்போதும் சுவாரஸ்யமான ஒன்று தான். ரசிக்கும் அதே வேலையில் கடல் நம்மை பயமுறுத்தவும் செய்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. 

பூமிப்பந்தின் 70 சதவீத இடத்தினை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது இந்த கடல். அதன் பரந்துப்பட்ட இடத்திற்கு ஏற்பவே தன்னுள்ளே பல்வேறு சுவாரஸ்யங்களை புதைத்து வைத்திருக்கிறது. கடல் குறித்து இதுவரை உங்களுக்குத் தெரியாத சில சுவாரஸ்ய்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

கடல் டிராகன் :

கடல் டிராகன் :

இந்த பூமியில் வாழ்கிற 94 சதவீத உயிரினங்கள் கடல் வாழ் உயிரினங்கள் தான் அவற்றின் மூன்றில் இரண்டு பகுதி உயிரினங்களை நாம் இன்னும் அடையாளம் காணவே இல்லை. தொடர்ந்து கடல் ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொன்றாக கண்டுபிடித்து அடையாளப்படுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் தெற்கு பகுதிக்கடலில் சிவப்பு நிற கடல் வாழ் டிராகனை கண்டுபிடித்திருந்தார்கள்.

சத்தம் :

கடலில் வாழுகின்ற உயிரினனங்கள் மட்டுமல்ல கடலில் எழும் ஓசை கூட ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் அதிசயமாய்த்தான் இருக்கிறது. கடலுக்கு அடியில் எண்ணற்ற ஓசைகள் எழுப்பப்படுகிறது ஆனால் இவற்றில் அதிக சத்தமாக ரெக்கார்ட் செய்யப்பட்டிருப்பது ‘ப்ளூப்' என்ற சத்தம் தான்.

இதனை 1997 ஆம் ஆண்டு தேசிய கடல் மற்றும் சுற்றுச்சூழல் நிர்வாகத்தினர் ஹைட்ரோபோன் மூலமாக ரெக்கார்ட் செய்திருக்கிறார்கள்.

கடலுக்குள் ஆறு :

ஆழ்கடல் புகைப்படங்களைப் பார்த்தால் கடலுக்குள் ஆறு,குளம் ஆகிய பகுதிகள் தெரியும். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடும். இதுவரையில் பல பகுதிகளிலிருந்து வருகின்ற ஆறு இறுதியாக கடலில் கலக்கிறது என்று தானே படித்திருக்கிறோம். கடலுக்குள் எப்படி ஒரு ஆறு சாத்தியமாகும் என்ற கேள்விக்கு விஞ்ஞானிகள் சொல்கிற பதில் என்ன தெரியுமா?

கடலுக்கு அடியில் மிகவும் அடர்த்தியான லேயரில் உப்பு படிந்திருக்கிறது. அப்படி படிந்திருக்கும் உப்பு அதோடு அந்த பகுதியின் கடல் நீர் அதிக அடர்தியாக இருக்கும். இதனால் பார்க்கிற நமக்கு சாதரண நீருக்கும் அதிக அடர்த்தியான நீரும் வேறுபட்டு தெரிவதாக சொல்கிறார்கள்.

 அருவி :

அருவி :

கடலுக்குள் ஆறு, குளம் போன்றவை மட்டுமல்ல அருவியும் கொட்டுகிறதாம் ! அறிவியல் படி பார்த்தால் க்ரீன்லேண்டுக்கும் ஐஸ்லாண்டுக்கும் இடையில் இருக்கிற கடலின் உள்ளே விழுகிற இந்த அருவி தான் உலகிலேயே மிகப்பெரிய அருவியாம்! ஆனால் இது வெளியில் தெரிவதில்லை என்பதில் அருவிகள் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

இந்த அருவி 11,500 அடி உயரத்திலிருந்து விழுகிறது.

காலநிலை மாற்றம் :

காலநிலை மாற்றம் :

இந்த அருவி உருவாவதற்கு காரணம் டெம்ப்பரேச்சர் மாற்றம் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. டென்மார்க் ஸ்ட்ரைட் பகுதி அருகில் ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு மாதிரியான டெம்ப்பரேச்சர் இருக்கிறது. கிழக்கு பகுதியில் குளிராகவும் அடர்த்தியாகவும் நீர் இருக்குமாம் இதே தெற்கு பகுதியில் வார்மாகவும் அடர்த்தி குறைவாகவும் இருக்கிறது.

வெனின்சுலாவில் இருக்கக்கூடிய ஏஞ்சல் அருவியை விட இந்த அருவி மூன்று மடங்கு உயரத்திலிருந்து விழுகிறது இந்த ஏஞ்சல் அருவி தான் உலகில் உயரமான இடத்திலிருந்து விழும் அருவியாக சொல்லப்படுகிறது. நயகரா அருவியில் கொட்டும் நீரை விர 2000 மடங்கு அதிகளவு நீர் கொட்டுகிறதாம்.


4 கிலோ தங்கம் :

கடலுக்கடியில் தங்கம் கலந்திருப்பதாக சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 18 மில்லியன் மெட்ரிக் டன் தங்கம் வரையில் கலந்திருக்கிறதாம். கடலுக்கடியில் ஒரு மைல் அல்லது இரண்டு மைல் ஆழத்திலிருந்து இந்த தங்கத்தை எடுக்க வேண்டும்.

ஒரு வேளை அப்படி எடுக்கப்பட்டால் உலகில் வாழும் மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் நான்கு கிலோ தங்கம் வரையில் கொடுக்கலாம் அந்த அளவிற்கு தங்கம் கிடைக்கும் என்கிறார்கள்.

கடலில் ஹாக்கி :

கடலில் ஹாக்கி :

கனடா நாட்டில் இருக்கும் நியூ ஃபவுண்ட்லேண்ட் பகுதியில் அட்லாண்டிக் கடல் இருக்கிறது. சில சமயங்களில் இந்த கடல் அப்படியே ஐஸ் கட்டி போல உறைந்து விடுகிறது. அந்த நேரத்தில் மக்கள் அங்கே ஹாக்கி விளையாடுவார்களாம்.

கடலில் ஹாக்கி விளையாடுவதை பார்க்க சுவாரஸ்யமாகத்தானே இருக்கும்.

Comments

Popular posts from this blog

வேம்பின் நன்மைகள்

5G தொழில்நுட்ப முடிவு என்ன மற்றும் 4G விட எவ்வளவு வேகமாக இருக்கும்.

மனித உடல் பற்றி ஆச்சரியமூட்டும் உண்மைகள்