மனித உடல் பற்றி ஆச்சரியமூட்டும் உண்மைகள்

மனித உடலின் , அவற்றின் செயல்பாடுகளைப் பற்றி சொல்லப் போனால், மிகவும் ஆச்சரியமாக இருக்கும். அத்தகைய மனித உடல் பற்றி இப்போது பார்க்கலாம். 



மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்றுவிடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானையின் காது அளவிற்கு வளர்ந்திருக்கும்.

ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம். உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே. பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறை கண்ணை சிமிட்டுகிறோம். இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.

உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள். விதம் விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக்கூடிய ஒரே ஆயுதம் நமது கை. தட்டில் இருக்கும் நூடுல்சை ஸ்பூனில் எடுக்கும்போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.

நமது பாதங்களை பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும். காரணம் ஒரு சதுர அடியில் வெறும் மூன்றில் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன

இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. வருடத்திற்கு நான்கு கோடி தடவை. இதயத்தின் இடதுபக்கத்தை விட வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்.

நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, இரண்டு நீச்சல் குளங்களை அப்புறபடுத்த தேவையான க்ளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க கூடிய அளவிற்கு பாஸ்பரஸ், 10 பார் சொப்புகளுக்கு தேவையான கொழுப்பு ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு என பல பொருட்கள் உள்ளன.

மூளை



மனிதனின் மூளையானது பகல் நேரத்தை விட, இரவில் தான் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். இதற்கான காரணம் இதுவரை சரியாக யாராலும் சொல்ல முடியவில்லை


நடுவிரல்

மற்ற விரல்களில் வளரும் நகங்களின் வளர்ச்சியை விட, நடுவிரலில் நகத்தின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.

இரைப்பை அமிலம்

இரைப்பையில் சுரக்கப்படும் அமிலமானது மிகவும் சக்தி வாய்ந்தது. ஆனால் அந்த அமிலத்தால் இரைப்பை அழியாது மாறாக இரைப்பையின் சுவரானது தானாக புதுப்பித்துக் கொள்ளும்.

கைவிரல் நகங்கள்

கால் விரலில் வளரும் நகங்களை விட, 4 மடங்கு அதிகமாக கைவிரலில் நகங்களானது வேகமாக வளரும்.

இரத்தம்



ஆண்களின் உடலில் 6.8 லிட்டர் இரத்தம் இருக்கும். பெண்களின் உடலில் 5 லிட்டர் இரத்தம் மட்டுமே இருக்கும்.

செல்



உடலிலேயே பெரிய செல் பெண்களின் கருமுட்டை. சிறிய செல் ஆண்களின் விந்தணு.

எச்சில்

எச்சில்

மனிதனின் வாழ்நாளில், வாயில் சுரக்கப்படும் எச்சிலானது 2 நீச்சல் குளங்களை நிரப்பும் அளவில் உற்பத்தியாகும்.

ஆணுறுப்பு எழுச்சி

ஆண்களுக்கு தூக்கத்தின் போது மணிக்கு ஒரு முறை செக்ஸ் உணர்வு தூண்டப்பட்டு ஆணுறுப்பானது எழுச்சி பெறுகிறது. இதற்குக் காரணம், இரத்த ஓட்டமும், டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியும் இணைவது தான். இதன் காரணமாக தூக்கத்தின் போதும் கூட ஆண்களுக்கு உறுப்பு எழுச்சி ஏற்பட்டு உபாதையைக் கொடுக்கும். இதனால் தான் பலருக்கு தூக்கத்தின் போது விந்தணு வெளிப்படுகிறது.

வலிமையான தசை

உடலிலேயே வலிமையான தசை என்றால் அது நாக்கு தான்.

கார்னியா/விழி வெண்படலம்

கார்னியா/விழி வெண்படலம்

உடலிலேயே இரத்த ஓட்டம் இல்லாத பகுதி தான் கார்னியா. இந்த கார்னியாவானது தனக்கு வேண்டிய ஆக்ஸிஜனை காற்றின் மூலம் பெற்றுக் கொள்கிறது.

மூக்கு மற்றும் காது

ஒருவர் வளர வளர அவரது மூக்கு மற்றும் காது வளர்ச்சி அடையும். ஆனால் கண்கள் ஒரே அளவில் தான் இருக்கும்

Comments

Popular posts from this blog

வியாழன் கிரகம் பற்றிய பிரமிப்பான உண்மைகள் (facts about jupiter in tamil)

5 interesting facts about 5G that you didn’t know yet