நம்ப முடியாத விண்வெளி உடைகள் குறித்த அபூர்வமான தகவல்கள்!

 நம்ப முடியாத விண்வெளி உடைகள் குறித்த அபூர்வமான தகவல்கள்!



விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் நம்மை போல் சாதாரணமாக உடை அணியாமல் வித்தியாசமாக உடை அணிந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். சினிமாவில் கூட பலர் விண்வெளி உடையுடன் கூடிய நடிகர்களை பார்த்திருக்கலாம். இந்த விண்வெளி உடை எதனால் செய்யப்பட்டது. எப்படி வடிவமைக்கப்பட்டது என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

உயிரை காப்பாற்றும் உடை

விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் விண்வெளி உடை இல்லாமல் செல்லவே முடியாது. அதிக வெப்பம் மற்றும் அதிக குளிரில் இருந்து விண்வெளிக்கு செல்லும் வீரர்களை இந்த உடைதான் காப்பாற்றுகிறது. அதுமட்டுமின்றி விண்வெளியில் ஆக்சிஜன் இருக்காது என்பதால் அந்த ஆக்சிஜனையும் தருவது இந்த உடைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

15 வினாடிகளுக்குள் மரணம்

விண்வெளி உடை இல்லாமல் விண்வெளியில் மிதந்தால் அதிகபட்சம் 15 வினாடிகளுக்குள் உடல் பெரிதாகி மரணம் ஏற்படும் என்பது பலர் அறியாத உண்மை ஆகும். விண்வெளி உடை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தயாரிக்கப்பட்டிருந்தாலும் அதன் முக்கிய நோக்கம் ஆக்சிஜன் கொண்டு செல்வதும் விண்வெளியில் உள்ள தூசுகளிடம் இருந்து காப்பாற்றுவதும் தான் என்பது ஒரு அடிப்படை தகவல்.

சூரியனின் அதிவெப்பமான ஒளி



விண்வெளி வீரர்களுக்கு சவாலான ஒன்று சூரியனின் அதிவெப்பமான ஒளி. பூமியில் சூரிய ஒளியின் வெப்பத்தை குறைக்க மேக்னடிக் அம்சம் இருப்பதால் பிரச்சனை இல்லை. விண்வெளிக்கு செல்பவர்களை சூரியனின் கதிர்களிடம் இருந்து காப்பதும் இந்த விண்வெளி உடைதான் என்பதை முதலில் ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும்.

அதிக அழுத்தம் இல்லாத எலாஸ்டிக் ரப்பர்



விண்வெளியில் சம அழுத்தம் உடைய ஒரு சுற்றுச்சூழல் விண்வெளி வீரருக்கு அவசியம் தேவை. அந்த ஒரு சரிசமமான அழுத்தத்துடன் கூடிய ஆக்சிஜனை இந்த விண்வெளி உடைதான் தருகிறது. இதற்காகவே விண்வெளி உடையில் ஒரு லேயர் உருவாக்கப்பட்டிருக்கும். அது ஒரு எலாஸ்டிக் ரப்பர் போல் செயல்பட்டு அதிக அழுத்தம் இல்லாமல் ஆக்சிஜனை கொடுக்க உதவும்.

அதிவேக துகள்களிடம் இருந்து பாதுகாக்க

விண்வெளியில் மில்லியன் கணக்கான துகள்கள் மிதந்து கொண்டிருக்கும். இவை சுமார் ஒரு மணிக்கு 27 ஆயிரம் கிமீ வேகத்தில் செல்லக்கூடியது என்பதால் இந்த துகளில் ஒன்று விண்வெளி வீரரின் மேல் பட்டாலும் அதோகதிதான். இந்த துகள்களிடம் இருந்து பாதுகாக்கவே ஒரு சிறப்பு அம்சம் இந்த விண்வெளி உடையில் பொருத்தப்பட்டுள்ளது என்பது இன்னொரு முக்கிய தகவல்.

ஆரஞ்சு நிற விண்வெளி உடை

விண்வெளி வீரர்கள் ஆரஞ்சு நிற உடை ஒன்றை அணிந்திருப்பதை ஒருசிலர் பார்த்திருக்கலாம். இந்த உடை விண்வெளி கலத்தில் இருக்கும்போது மட்டும் விண்வெளி வீரர்கள் அணிந்து கொள்வார்கள். மேலும் இந்த விண்வெளி உடையில் சிறுநீரை சேகரிக்கும் ஒரு பாத்திரம் போன்ற அமைப்பும் உண்டு என்பது கூடுதல் தகவல்.

சிறப்பு லூனார் விண்வெளி உடை

அப்பல்லோ விண்வெளி கலத்தில் சென்றவர்கள் ஒரு சிறப்பு உடையை அணிந்து கொண்டு சென்றார்கள். ஏனெனில் அவர்கள் லூனார் பகுதியில் செல்ல வேண்டிய நிலை இருந்ததால் அந்த சிறப்பு உடை அவர்களுக்கு தேவைப்பட்டது.

பாதரச விண்வெளி உடை

நாசா முதல்முதலில் தயாரித்த விண்வெளி உடையில் பாதரசம் உண்டு என்பது யாருக்காவது தெரியுமா? ஆம், பாதரச உடையைத்தான் முதல் விண்வெளி வீரரான அமெரிக்க வீரர் அணிந்து விண்வெளிக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு விண்வெளி உடை எஸ்கே 1

சோவியத் ரஷ்யாவின் யூரி காகாரின் என்பவர் முதல் முறையாக விண்வெளிக்கு அணிந்து சென்ற உடையின் பெயர் எஸ்கே 1 என்ற உடைதான். விண்வெளி கலத்தை இயக்கும் பைலட்டுக்களுக்கு கூடுதல் சிறப்பு விண்வெளி உடையை அணிந்து கொள்வார்கள்.

Comments

Popular posts from this blog

வேம்பின் நன்மைகள்

5G தொழில்நுட்ப முடிவு என்ன மற்றும் 4G விட எவ்வளவு வேகமாக இருக்கும்.

மனித உடல் பற்றி ஆச்சரியமூட்டும் உண்மைகள்