வியாழன் கிரகம் பற்றிய பிரமிப்பான உண்மைகள் (facts about jupiter in tamil)
வியாழன் நமது சூரிய குடும்பம் உருவாகி கிட்டதட்ட 4.6 பில்லியன் ஆண்டுகள் ஆகிறது, நமது சூரிய குடும்பத்தில் மிகவும் பழமையான மற்றும் வயதான கோள் என்றால் இந்த வியாழன் எனலாம் இந்த கிரகம்தான் சூரிய குடும்பத்தில் உருவான முதல் கிரகம் ஆகும். இந்த வியாழன் கிரகம் பற்றி நீங்கள் இன்றுவரை கேள்விபடாத சில பிரமிப்பான உண்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம். பெரிய கிரகம் வியாழன் இந்த சூரிய குடும்பத்திலேயே மிகப்பெரிய கோள் இந்த வியாழன் எனலாம் , எந்த அளவுக்கு பெரியது என்றால் வியாழன் கிரகத்தினுள் 1500 பூமிகளை வைக்கமுடியும் அந்த அளவுக்கு பெரியது. இந்த கிரகம் சூரிய ஒளியில் கிட்டதட்ட பாதிக்கும் மேற்பட்ட ஒளியை பிரதிபலிக்கிறது. இந்த வியாழனுக்கும் சனி போன்ற வளையம் உண்டு ஆனால் அது அளவில் ம...